அதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள் 
மகளிர்மணி

அதிகம் சாப்பிடக் கூடாத உணவு வகைகள்!

முளைக்கீரையை அதிகம்  சாப்பிட்டு வந்தால்  வயிறு மந்தம் அதிக  நீர்ப்போக்கு உண்டாகும்.  இதனை  மாற்றக் கீரையைக் கடைந்ததும் சிறிது  சீரகம் தாளித்து  சேர்த்து உண்ணலாம்.

எல்.நஞ்சன்

முளைக்கீரையை அதிகம்  சாப்பிட்டு வந்தால்  வயிறு மந்தம் அதிக  நீர்ப்போக்கு உண்டாகும்.  இதனை  மாற்றக் கீரையைக் கடைந்ததும் சிறிது  சீரகம் தாளித்து  சேர்த்து உண்ணலாம்.

வாழைப்பழம்  அளவுக்கு அதிகமாகக் சாப்பிடுபவர்களுக்கு  வயிற்றுப்  பொருமலும்  சூட்டுடன் பேதியும்  உண்டாகும்.

சோளம் அதிகமாக  உபயோகிப்பவர்களுக்கு  வயிறு இரைதல்,  பொருமல், மந்தம்  உண்டாகும்.  இதனை  மாற்ற அரை டம்ளர்  பால்  அல்லது ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிடலாம். 

முட்டை அதிகம்  சாப்பிட்டால் அடிக்கடி முட்டை ஏப்பம்  வரும்,  செரியாமை  உண்டாகும்.  அதற்கு  முள்ளங்கியை  வேக வைத்துத் தின்னலாம். அல்லது குல்கந்து  ஒரு தேக்கரண்டி  சாப்பிடலாம்.

அன்னாசிப்பழம்  அதிகம் உண்டால்  தொண்டைக் கபம்  அஜீரணம்  உண்டாகலாம்.  இதற்கு   அன்னாசியுடன் சர்க்கரை கலந்து  உண்ணலாம்.  

பலாச்சுளைகளை அதிகம்  உண்டால்  வயிறு உப்புசம்,  மந்தம்,  பசியின்மை, பேதி  உண்டாகும்.   இவை உண்டாகாமல் இருக்க  நெய் அல்லது  தேனில்  பலாச்சுளைகளைத் தோய்த்துச் சாப்பிடலாம்.  அல்லது ஒரு பலாக் கொட்டையைச் சுட்டு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT