மகளிர்மணி

சோயா ஃபிரைட் ரைஸ் செய்வது எப்படி?

பாசுமதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். சோயா பீன்ûஸ நன்கு வேக வைத்து எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும்.

தினமணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - அரை கிலோ
சோயா ( மீல் மேக்கர்) - 150 கிராம்
கேரட் - 2
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 1
மிளகுத்தூள் - சிறிய அளவு
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 6
பிரிஞ்சி இலை - 2
முந்திரி பருப்பு - 8
உலர்திராட்சை - 2 தேக்கரண்டி
நெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பாசுமதி அரிசியை சாதமாக வடித்துக் கொள்ளவும். சோயா பீன்ûஸ நன்கு வேக வைத்து எடுத்து நீரை வடித்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவிக் வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு கேரட்டை வதக்கவும். அத்துடன் இஞ்சி விழுது, மிளகுத் தூள், பூண்டு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து மசாலா வாசனை வரும் வரை வதக்கவும். பின்னர், இத்துடன் உதிரியான சாதம், வேக வைத்த சோயா, உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி உலர் திராட்சை சேர்த்து, மீதமுள்ள நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி கொடுத்து, 5 நிமிடத்தில் இறக்கவும். சோயா ஃ பிரைட் ரைஸ் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!

எலைட்! க்யூட்!! ப்ரெட்டி... ப்ரீத்தி!

SCROLL FOR NEXT