மகளிர்மணி

ஈச்சம் பழத்தின் நன்மைகள்!

ஏ. காந்தி

பொதுவாக  கிராமப்புறங்களில்  பரவலாகக் காணப்படுவது ஈச்ச மரம்.  இது பேரீச்சை மரத்தின் தன்மை கொண்டது. அதில் விளையும் பழம் ஈச்சம்பழம் எனப்படுகிறது. இந்தியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்டிருக்கும் ஈச்சமரத்தில் விளைகின்ற ஈச்சம் பழங்களை உண்பதால்  கிடைக்கும்  நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்: 

 மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் உணவு எடுத்துக் கொள்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.
 ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. 
 ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்னை ஏற்படுவதையும் தடுக்கும். 
 ஈச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என தினந்தோறும் சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்,  அவர்களின் உடல் பலம் பெறும். 
 ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் வயது மற்றும் உயரத்திக்கேற்ற எடை இருப்பது அவசியமாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள், இயல்பான எடைக்கு குறைவான உடல் எடை கொண்டவர்கள் தினந்தோறும் ஈச்சம் பழங்களை அரைத்து,  சூடான பாலில் கலந்து  அருந்தி வந்தால் உடல் எடை பெருகும். 
 புகையிலை, சிகரட், பீடி, மது போன்ற போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள், சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும்.
 ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தருகிறது. 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT