மகளிர்மணி

தூதுவளை - புதினா துவையல் 

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்

ஏ. காந்தி


தேவையானவை :

தூதுவளை இலை - 2  கிண்ணம்
புதினா - 1  கிண்ணம்
பூண்டு - 4 பல்
இஞ்சி -  சிறு துண்டு
சிறிய வெங்காயம் - 10 
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 2  தேக்கரண்டி
புளி - கோலிக்குண்டு அளவு
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க :  
கடுகு, உளுத்தம் பருப்பு -  தலா  1கரண்டி
 பெருங்காயம்- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :  பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.  ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். பின்னர், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில்  சேர்க்கவும்.

பயன் : சளி தொல்லையை போக்கும் தன்மை  தூதுவளைக்கு உண்டு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT