மகளிர்மணி

ஓமம் சுக்குக் குழம்பு 

மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும். ஓமத்தை தனியே சூடான வாணலியில் ஒருமுறை புரட்டி எடுக்கவும்.

தினமணி


தேவையானவை:

ஓமம் - 1 தேக்கரண்டி,
சுக்குப்பொடி - 1 தேக்கரண்டி,
தக்காளி துண்டங்கள் - அரை கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 2 மேஜைக்கரண்டி
பூண்டுபல் - 10
மிளகாய் வற்றல் - 4
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி கரைசல் - அரை கிண்ணம்
உப்பு - ருசிக்கேற்ப
சமையல் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, மிளகு ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும். ஓமத்தை தனியே சூடான வாணலியில் ஒருமுறை புரட்டி எடுக்கவும். வாணலியை சூடாக்கி பாதி அளவு எண்ணெயை விட்டு, கடுகு வெடிக்க விட்டு உளுத்தம் பருப்பு, மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். 

வெங்காயம் மற்றும் தக்காளியோடு துளி உப்பு சேர்த்து வதக்கவும். இதோடு புளிக் கரைசல் மற்றும் மஞ்சள் தூள் மீதமுள்ள உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இந்த நிலையில் ஓமம் மற்றும் சுக்குப் பொடி சேர்த்து பாத்திரத்தை மூடி வைத்து மீண்டும் ஒரு கொதி வரும் போது இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கலந்து சாப்பிடவும்.

பயன்:  விஷத்தன்மையை நீக்கும் குணம் வாய்ந்தது இந்த குழம்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT