முகப்பு
மகளிர்மணி

இஞ்சி ஊறுகாய்

புளியை அரை  கிண்ணம் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

Updated On : 30 ஜூன், 2021 at 5:35 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:01 AM

தேவையானவை:

நார் இல்லாத இஞ்சி - கால் கிலோ
பச்சை மிளகாய் -  50 கிராம்
புளி, பொடித்த வெல்லம் –- தலா 50 கிராம்
மஞ்சள்தூள் -  கால் தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி 
நல்லெண்ணெய், உப்பு -  தேவைக்கேற்ப

செய்முறை : 

Advertisement

புளியை அரை  கிண்ணம் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். இஞ்சி நன்கு வெந்து, எண்ணெய்ப் பிரிந்து வந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறவிடவும். இஞ்சி ஊறுகாய் ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.