மகளிர்மணி

ஜாதிக்காயின் பயன்கள்

ஜாதிக்காய் ஒரு நறுமண மசாலாப் பொருள். உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது.

கே.ஆர். உதயகுமார்

ஜாதிக்காய் ஒரு நறுமண மசாலாப் பொருள். உணவில் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் இது சேர்க்கப்படுகிறது. இந்திய உணவுகளில் பல்வேறு சமையலில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி ஜாதிக்காயின் மருத்துவப் பயன்களை கீழே காணலாம்.

1. ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து  கரும் தழும்புகள் மற்றும் முகத்தில் மீது பற்றுப்போட முகப்பரு மற்றும் கரும் தழும்புகள் நீங்கும் . 

2.அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டால் அம்மை கொப்பளங்கள் குறையும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன .

3.பல் வலி உள்ள இடத்தில் 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை தடவ வலி குணமாகும் . 

4. ஜாதிக்காய் 100 கிராம் , சுக்கு 100 கிராம் , சீரகம் 300 கிராம்  இவற்றை நன்றாக தூள் செய்து உணவுக்கு முன்னர் 2 கிராம் அளவு எடுத்து சாப்பிட அஜீரணம் குணமாகும் . 

5.தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காய் பொடி அரை மே.கரண்டி அளவு எடுத்து ,சூடான பாலில் கலந்து உண்டு வர தூக்கம் நன்றாக வரும் .  நரம்பு சம்பந்தமான கோளாறுகள் விலகும் . 

6.இரவு உறங்கும் முன்பு பாதாம் பருப்பை பாலில் அரைத்து அதனுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து ஓரு மண்டலம் உண்டு வர நரம்புகள் வலிமை பெற்று ஆண்மை குறைவு நீங்கி நரம்பு தளர்வு நீங்கும் ..

7..குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சிறிதளவு ஜாதிக்காயை உரசிநாக்கில் தடவ வயிற்று போக்கு நிற்கும். ஆனால் அதிகமாக பயன்படுத்தக் கூடாது . 

8.ஜாதிக்காய் மற்றும் பிரண்டை உப்பு இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிட நரம்பு தளர்ச்சி நீங்கும் . 

9.கண் பார்வை குறைவாக உள்ளவர்கள் இரவில் தூங்கும் முன்பாக ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி பற்றுப் போட்டு காலையில் முகம் கழுவி வர கண் பார்வை தெளிவு பெறும் .  

10.. காலரா மற்றும் பேதிக்கு ஜாதிக்காய் தூளை எடுத்து 200 மி.லி நீரில் போட்டு பாதியளவு வந்தவுடன் இறக்கி குடிக்க காலரா மற்றும் பேதி நிற்கும் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT