மகளிர்மணி

வசம்பின் மருத்துவ குணங்கள்!

நெ. இராமன்

வசம்பின் வேர்,  தண்டு,  இலை, பூ ஆகியவை மருந்தாகும்.  வயிற்றுப் போக்கு நீக்கும்.

இருமல்,  நரம்பு தளர்ச்சி,  வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.

வெட்டு காயங்களின் மீது வசம்புத் தூளை  வைத்து கட்டினால்  குணமாகும்.

வசம்பை சுட்டுத் தூளாக்கி  சுக்குத் தூளுடன்  கலந்து  வயிற்றின் மேல் பகுதியில் பூசினால்  வயிறு உப்புசம்  குணமாகும்.

வசம்பு தாள்களை  சிறுசிறு  துண்டாக்கி  நீரில்  போட்டு அரைமணி நேரம் கழித்து  குளித்தால்  குழந்தைகளுக்கு  தோல்நோய்  வராது.

வசம்புத் தூளை தேனில்  குழைத்து  குழந்தைக்கு  கொடுத்தால்  காய்ச்சல்  குணமாகும்.

வசம்பு   பித்தப்பை, சிறுநீர்ப்பை  கற்களை  கரைக்கும் தன்மை உடையது.

அரை தேக்கரண்டி  வசம்பு தூளுடன்  பனங்கற்கண்டு  சேர்த்து  உண்டு வர  நரம்பு தளர்ச்சி  குணமாகும்.

வெந்நீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை  கலந்து  கிருமி நாசினியாகவும்  பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT