மகளிர்மணி

கதம்ப சுண்டல்

காராமணி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு தனியே வைக்கவும்.

ஏ. காந்தி

தேவையானவை:

வெள்ளை காராமணி -  கால் கிண்ணம்
வேர்க்கடலை - அரை கிண்ணம்
இனிப்புச்சோளம் -  கால் கிண்ணம் 
(உதிர்த்தது)
தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு - 2  தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி 
வரமிளகாய் - 3
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1  தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை -  1 ஈர்க்கு
பெருங்காயம் -  அரை தேக்கரண்டி

செய்முறை: 

காராமணி, வேர்க்கடலை இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேகவிட்டு தனியே வைக்கவும். உதிர்த்த இனிப்புச் சோளத்தை சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட்டுத் தனியே வைக்கவும். வாணலியில் 1  தேக்கரண்டி  எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த காராமணி, வேர்க்கடலை, சோளம் இவற்றைச் சேர்த்து வதக்கி பொடித்த பொடியினைத்தூவி, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT