முகப்பு
மகளிர்மணி

மீண்டும் சூடு படுத்தாதீர்!

காளான்  உணவுகளை  தயாரித்த  நான்கு மணி நேரத்திற்குள்  சாப்பிட வேண்டும்.  மறுநாள்  சாப்பிட்டாலோ  மீண்டும்  சூடு படுத்தினாலோ காளானிலுள்ள  புரதம்  சிதைந்து  இதயத்தைப் பாதிக்கும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

காளான்  உணவுகளை  தயாரித்த  நான்கு மணி நேரத்திற்குள்  சாப்பிட வேண்டும்.  மறுநாள்  சாப்பிட்டாலோ  மீண்டும்  சூடு படுத்தினாலோ காளானிலுள்ள  புரதம்  சிதைந்து  இதயத்தைப் பாதிக்கும்.

பீட்ரூட்  கறி  வகைகளை  சமைத்த பிறகு  மீண்டும் சூடு படுத்தினால்  சத்துகள்  அழிந்து விடும். வயிற்று உபாதைகள்  ஏற்படும்.

கீரை  உணவுகளை  மறுபடியும் சூடு படுத்தினால்  கீரையிலுள்ள  நைட்ரஜன் சத்து சிதைந்து நஞ்சாக  மாறிவிடும்.  இதனால் குடல் புற்று  ஏற்படும் அபாயம் உண்டு.

பாலாடை  மற்றும்  பால் பொருள்களை  மீண்டும்  சூடுபடுத்தக்கூடாது. பாலிலுள்ள  கால்சியம்  சிதைந்து  வயிற்றில்  கட்டிகளை உருவாக்கும்.

முட்டையை  மிதமான சூட்டில்தான் வேக வைக்க வேண்டும்.  அளவுக்கு  மீறி சூடு  படுத்தினால்  முட்டையிலுள்ள புரதம்  நஞ்சாக  மாறி வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.