முகப்பு
மகளிர்மணி

பரங்கிக்காய்  இனிப்பு கூட்டு 

பரங்கிக்காய், மாம்பழத்தை தோல்சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். அரை தேக்கரண்டி, மஞ்சள்பொடி, உப்பு , வெல்லம் ஆகியவற்றைப் போட்டு பரங்கிக்காயையும் மாம்பழத்தையும் நன்றாக வேகவிடவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:


தேவையானவை:

பரங்கி துண்டுகள் - 3
தேங்காய் - 1 மூடி (துருவியது)
பச்சைமிளகாய் - 3
வெந்தயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
வெல்லம் - எலுமிச்சை அளவு
மாம்பழம் - 3

செய்முறை:

பரங்கிக்காய், மாம்பழத்தை தோல்சீவி பெரிய துண்டுகளாக நறுக்கவும். அரை தேக்கரண்டி, மஞ்சள்பொடி, உப்பு , வெல்லம் ஆகியவற்றைப் போட்டு பரங்கிக்காயையும் மாம்பழத்தையும் நன்றாக வேகவிடவும். வெந்தபின் அரைமூடி துருவிய தேங்காய், பச்சைமிளகாய், அரை தேக்கரண்டி கடுகை தண்ணீர்விட்டு கெட்டியாக அரைத்து, அதை கூட்டில் கொட்டவும். கெட்டியானதும் தேங்காய் எண்ணெய்யில் கடுகு, வெந்தயம் தாளித்து, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.