முகப்பு
மகளிர்மணி

பரங்கிப்பழ பச்சடி 

முதலில்  பரங்கிப் பழத்தை  சிறு துண்டுகளாக  நறுக்கி  வைத்து கொள்ளவும்.  புளியினை  தண்ணீரில் ஊற வைத்து, புளி கரைசல்  தயார்  செய்து கொள்ளவும்.  பச்சை மிளகாயை  நீளவாக்கில்  நறுக்கி  வைத்துக் கொள்ளவும்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

தேவையானவை:

பரங்கிப்பழம் - கால்கிலோ
புளி - எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 3
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய்- கால்மூடி
சீரகம் - 1 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லிதழை - சிறிதளவு
தாளிக்க:
கடுகு, உளுந்தம் பருப்பு,
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் பரங்கிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். புளியினை தண்ணீரில் ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளிக் கரைசலின் பெருங்காயப்பொடி, சாம்பார்பொடி, பச்சைமிளகாய், உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதில் நறுக்கிய பரங்கிப் பழத்தைப் போட்டு வேக வைக்கவும். தேங்காய், சீரகம், அரிசியினை மிக்ஸியில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பரங்கிப் பழம் நன்கு வெந்ததும் இந்த மசாலா விழுதினைப் போட்டு கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். ஒரு வாணலியில் கலந்து நன்றாகக் கொதிக்க விடவும். பின்னர், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பச்சடியில் கலக்கவும். இந்த பரங்கிப் பழப் பச்சடியில் கொத்துமல்லியை தூவி பறிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.