மகளிர்மணி

பஜ்ஜி சுவையாக இருக்க..

துவரம் பருப்பை  வேக வைக்கும்போது  ஒரு தேக்கரண்டி  வெந்தயத்தைச் சேர்த்து  வேக வைத்தால் பருப்பு  சீக்கிரம்  வெந்துவிடும்.

ஆர். கீதா

.

துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு , கத்திரிக்காய் போன்றவற்றில் பஜ்ஜி செய்யப் போகிறீர்களா? காய்களை வில்லைகளாக நறுக்கி ஒருவில்லையின் மேல் ஏதாவது ஊறுகாய் விழுதை தடவிவிட்டு அதன்மேல் இன்னொரு வில்லையை வைத்து மூடி பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.

வடை, பஜ்ஜி, போண்டா, தோசை, அடை போன்றவை மொறு மொறுப்பாக வர வேண்டுமா? ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து அதை இரண்டு தேக்கரண்டி எடுத்து மாவுடன் கலந்து செய்தால் மொறுமொறுப்பாக வரும்.

மெதுவடைக்கு அரைத்த மாவின் பதம் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அரைத்த மாவைச் சிறிதளவு உருட்டிப் போட்டால் மேலே மிதந்து வரும். இதுவே சரியான பதம்.

குலோப்ஜாமூனுக்கு பாகு செய்து இறக்கும்போது, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கலந்து இறக்கினால் பாகு சீக்கிரம் கெட்டுப் போகாது. கூடுதல் சுவையாக இருக்கும்.

சேமியா உப்புமாவின் சுவையைக் கூட்ட உப்பு சேர்த்து இறக்குவதற்கு முன்னால் அரை மூடி எலுமிச்சைச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம்.

சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது சிறிதளவு புளித் தண்ணீர் ஊற்றி வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

SCROLL FOR NEXT