மகளிர்மணி

தேங்காய்ப் பால் கொழுக்கட்டை

அரிசி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளுங்கள்.

அ . ப . ஜெயபால்

தேவையானப் பொருள்கள்:

அரிசி மாவு- 1 கிண்ணம்
தேங்காய் - தேவையான அளவு
சர்க்கரை- 2 தேக்கரண்டி
வெல்லம்- அரை கிண்ணம்
தேங்காய்ப் பால்- அரை கிண்ணம்
நெய்- 3 தேக்கரண்டி

செய்முறை: 

அரிசி மாவை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளுங்கள்.  பின்பு அந்த மாவில் பாதியை தனியாக எடுத்து வையுங்கள். மீதமிருக்கும் மாவில் துருவிய தேங்காய், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். வாணலியில் வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள். அதை மற்றொரு வாணலியில் ஊற்றி மீண்டும் சூடுபடுத்துங்கள். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை அதில் போட்டு கொதிக்க வையுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து, அடுப்பில் இருந்து இறக்கி வையுஹ்கள். இப்போது பால் கொழுக்கட்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT