மகளிர்மணி

தேன் கேக்

பொடித்த சர்க்கரையும் வெண்ணெயும் சேர்த்து நன்றாகக் குழைக்க வேண்டும். முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து, அதை குழைத்த கலவையில் சேர்க்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: 

சர்க்கரை- 200 கிராம்
மைதா மாவு- 500 கிராம்
தேன்- 250 கிராம்
வெண்ணெய்- 200 கிராம்
பேகிங் பவுடர்- 1 தேக்கரண்டி
ஆரஞ்சு எசன்ஸ்- சில துளிகள்
முட்டை- 2

செய்முறை: 

பொடித்த சர்க்கரையும் வெண்ணெயும் சேர்த்து நன்றாகக் குழைக்க வேண்டும். முட்டைகளை உடைத்து நன்றாக அடித்து, அதை குழைத்த கலவையில் சேர்க்க வேண்டும். அதில், தேனையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். பேகிங் பவுடர், மைதா மாவும் ஒன்றாகச் சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவைக் குழைத்து கலவையில் போட்டுக் கலக்க வேண்டும். பத்து அங்குல நீளமும் இரண்டரை அங்குல அகலமும் உள்ள பாத்திரத்தில் பேக் செய்ய வேண்டும். தட்டில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ள வேண்டும். அந்தத் தட்டில் கலவையை போட வேண்டும். இந்தத் தட்டினடி சூட்டில் வைத்து 45 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இதுவே "தேன் கேக்' .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு

திருபுவனம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக எம்பி-க்கள்ஆதரிக்க வேண்டும்: ஹெச். ராஜா

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: அரியலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT