மகளிர்மணி

பருக்களின் தழும்புகள் நீங்க...

சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் குழைத்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவி வர,  பருக்களின் வடுக்கள் மறைய

பா.கவிதா

சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் குழைத்து, முகத்தில் தடவி, ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவி வர,  பருக்களின் வடுக்கள் மறையும்.

சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்து  நன்றாக மைப்போல அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசிக் 30 நிமிடங்கள் கழித்து  கழுவி விர பருக்கள் மறையும்.

சிறிது வெந்தயத்தை எடுத்து, அவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும்.  அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவி சிறிது நேரம் வைத்திருந்து, மீண்டும்  முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம், முக்கியமாக கழுவியப் பின்னர் துடைக்கக்  கூடாது. அப்படியே காற்றில் உலரவிட வேண்டும். இப்படி செய்து வர, பருக்கள் குறையும்.

ஆலிவ் எண்ணெய்யைப் பருக்களால் ஏற்பட்ட தழும்பு உள்ள பகுதிகளின்மீது தடவி மசாஜ் செய்ய  நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்தால், சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

கருப்பான தழும்புகள் மீது சுத்தமான தேனை தடவி, சற்றுநேரம் வைத்திருந்து நல்ல தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். இதனால் தேனின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையினால், கருப்பான தழும்புகள் நாளடைவில் மறையத் தொடங்குவதைக் காணலாம்.

சிறிது பன்னீர் எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது புதிய ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிரவைத்து வடிகட்டி எடுத்து முகத்தில் தடவிக் கொண்டு வர பருக்கள் மறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT