மகளிர்மணி

வெள்ளை சோளம் தோசை 

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு பத்திரத்தில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருள்களையும் கலந்து தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்குக் கரைப்பது போல கரைத்துக் கொள்ளவும்.

எம்.ராஜதிலகா

தேவையானவை:

வெள்ளை சோள மாவு - 1 கிண்ணம்
அரிசி - 1 கிண்ணம்
மைதா -  கால் கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி -  அரை தேக்கரண்டி
சீரகம் -  அரை தேக்கரண்டி
மிளகுப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: 

பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். ஒரு பத்திரத்தில் மேலே கொடுத்துள்ள எல்லா பொருள்களையும் கலந்து தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்குக் கரைப்பது போல கரைத்துக் கொள்ளவும்.

இரண்டு மணிநேரம் அப்படியே வைக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கொஞ்சம் எண்ணெய் விட்டு மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். சோள தோசை தயார். சட்னி அல்லது சாம்பாருடன் உண்ணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: பல வணிக கட்டடங்கள் சேதம்

ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!

மறுவெளியீட்டில் கலக்கும் மோகன்லால் திரைப்படம்!

தில்லி காவல்துறையில் தலைமைக் காவலர் வேலை: +2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே... பிரணிகா!

SCROLL FOR NEXT