முகப்பு
செய்திகள்

ஹார்ட் பீட் - 3 வெளியீட்டில் தாமதம்! காரணம் என்ன?

ஹார்ட் பீட் - 3 வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது பற்றி...

Updated On : 24 ஜூன் 2026, 11:18 am IST
ஹார்ட் பீட் - 3 - Jio Hot Star
பகிர்:

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விபத்தில் இருந்து உயிர்பிழைத்த நாயகி ரீனா (தீபா பாலு) தனது கோமா நிலைக்கு சென்றதுடன், ஹார்ட் பீட் - 2வது சீசன் நிறைவடைந்தது. இதற்குப் பிறகான கதை எப்படி இருக்கும் என்று, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மூன்றாவது சீசன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

ஹார்ட் பீட் - 3 நாளை (ஜூன் 25) முதல் ஒளிபரப்பாகும் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.

இந்த தொடர் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதம் ஏன்?

ஹார்ட் பீட் - 2 வது சீசன் வாரந்தோறும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வியாழக்கிழமை ஒளிபரப்பானது.

தற்போது நடிகர் விக்ராந்த் நடிக்கும் எல்.பி.டபள்யூ. இணையத் தொடர் வியாழக்கிழமை ஒளிபரப்பாகி வருகின்றது. வழக்கமாக அனைத்து இணையத் தொடர்களின் சீசன்களும் 100 வது எபிசோடுகளுடன் நிறைவடையும். அதன்படி, எல்.பி.டபள்யூ. தொடரின் 100-வது எபிசோடு கடந்த வாரம் ஒளிபரப்பானது.

இதன்படி, கடந்த வாரத்துடன் எல்.பி.டபள்யூ. முதல் சீசன் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் மூன்று வாரங்கள் வரை முதல் சீசன் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

எல்.பி.டபள்யூ. தொடரும், வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ரெசார்ட் தொடரும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில், இதற்கு மத்தியில் ஹார்ட் பீட் தொடரையும் வெளியிட வேண்டாம் என்று ஜியோ ஹார்ட் ஸ்டார் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், எல்.பி.டபள்யூ. முதல் சீசன் நிறைவடைந்த பிறகே, ஹார்ட் பீட் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளது.

summary

Delay in the release of Heart Beat 3! What is the reason?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments