FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஹார்ட் பீட் - 3 தொடரில் இணைந்த பிரபலம்! யார் இவர்?

ஹார்ட் பீட் - 3 தொடரில் இணைந்த ராகுல் ராஜசேகரன் குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 4:03 pm IST
ராகுல் ராஜசேகரன் - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூன்றாம் பாகத்தில் இந்திய மாடலான ராகுல் ராஜசேகரன் இணைந்துள்ளார்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசன் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

முந்தைய சீசன்களில் நடித்த நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார்கள்.

Advertisement

Advertisement

இவர்களைத் தொடர்ந்து, ஆஹா கல்யாணம் நடிகை காயு ஸ்ரீ மற்றும் இந்திய மாடலும் நடிகருமான ராகுல் ராஜசேகரன் ஆகியோர் இந்தத் தொடரில் இணைந்துள்ளனர்.

யார் இந்த ராகுல் ராஜசேகரன்?

ராகுல் ராஜசேகரன் இந்திய மாடல், நடிகர் மற்றும் சர்வதேச அழகுப் போட்டி வெற்றியாளர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டில் "மிஸ்டர் சுப்ரனஷனல் இந்தியா" (Mister Supranational India 2021) என்ற பட்டத்தை வென்றதன் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

இவர், மாடலிங் துறையைத் தவிர்த்து, வரனே அவஷ்யமுண்ட், திவான்ஜிமூலா கிராண்ட் பிரிக்ஸ் ஆகிய மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹார்ட் பீட் தொடரில் ராகுல் இணைந்துள்ளது, அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

summary

Indian model Rahul Rajasekharan has joined the third season of the popular web series 'Heartbeat'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments