மகளிர்மணி

உருளைக்கிழங்கு கபாப்

ஆர். ஜெயலட்சுமி


தேவையானவை:

உருளைக்கிழங்கு  - அரை கிலோ
பெரிய வெங்காயம்  -  3
கடலைமாவு  -  50 கிராம்
தனியாத்தூள்  - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்  - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள்  - அரை தேக்கரண்டி
கசகசா - அரை தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள்  -  சிறிதளவு
நெய்,  உப்பு  - தேவைக்கேற்ப


செய்முறை:  


உருளைக்கிழங்கை  வேக வைத்துத் தோலுரித்து  நன்றாக  மசித்துக் கொள்ள வேண்டும்.  அதில் கடலைமாவு,  தனியா,  மிளகாய்த்தூள்,  மஞ்சள் தூள், ஏலக்காய்,  உப்பு,  கசகசா  சேர்த்து  நன்றாக  கலந்து  கொள்ள வேண்டும். வாணலியில்  சிறிதளவு  எண்ணெய்விட்டுப்  பொடியாக  நறுக்கிய வெங்காயத்தைப்  போட்டுப்  பொன்னிறமாக  வதக்கிக்  கொண்டு அதில் உருளைக்கிழங்குக்  கலவையைக்  கொட்டிச் சிறிது  நேரம்  கிளறி  இறக்க வேண்டும்.

கலவையை  ஒரே அளவுள்ள  சிறு உருண்டைகளாக்கி  வைக்கவும்.  அடுப்பில்  தோசைக் கல்லை வைத்துக் காய்ந்தவுடன்  உருண்டைகளை வடை போல்  தட்டி  தோசைக் கல்லில்  வைத்து நெய்விட்டு  இரண்டு புறமும்  சிவக்க வேக வைத்து  எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT