மகளிர்மணி

பூண்டு ரசம் 

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

பூண்டு - 5 பற்கள்
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 2  தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
தக்காளி - 1 (நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
கரைத்தபுளி  - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2 
கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:  

பூண்டு, மிளகாய் வற்றல்,  மிளகு, சீரகம்,  கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெயை விட்டு, தக்காளி, கருவேப்பிலை, பெருங்காய தூள் , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலந்து, புளி,  தண்ணீரை சேர்த்து, மூடிவைத்து நன்கு கொதிக்க விடவும். பிறகு வாணலியில்  நெய் ஊற்றி சூடானதும் பிறகு, கடுகு, மிளகாய்வற்றல்,  பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கும் கலவையை ஊற்றி கீழே இறக்கி கொத்தமல்லியை போட்டு மிளகு தூள் தூவவும். சுவைமிக்க ரசம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT