மகளிர்மணி

சோயா பீன்ஸ் சுண்டல் 

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:


காய்ந்த வெள்ளை சோயா பீன்ஸ் - 1/2  கிண்ணம்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
துருவிய தேங்காய் - 3 மேசை கரண்டி
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை


செய்முறை:  

சோயா பீன்சை ஒரு நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, குக்கரில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 3 விசில் மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்தவுடன் நீரை வடித்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், பின் வேக வைத்த சோயா பீன்ûஸ சேர்க்கவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். ஆரோக்கியம் நிறைந்த சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT