மகளிர்மணி

கல்யாண முருங்கை தோசை

கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து,  அதன்  நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும்.

ஆர்.ரக்சனா சக்தி

தேவையானவை:

கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
பச்சரிசி - 1 கிண்ணம்
இட்லி அரிசி - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 5  தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் -3
பெருங்காயம் -சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு 


செய்முறை:

கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து,  அதன்  நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும். பச்சரிசி, இட்லி அரிசி, கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நன்றாக ஊற வைத்து கிரைண்டரில் போட்டு  அரைக்கவும்.  பின்னர்,  சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயத்தை அதில் சேர்த்து நன்கு அரைக்கவும். இறுதியில் மாவில் உப்பு சேர்த்து  கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு மாவை தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

SCROLL FOR NEXT