மகளிர்மணி

உருளை பால் கறி

உருளைக்கிழங்கு, ஊற வைத்த பட்டாணி இரண்டையும் வேக வைத்து உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

உருளைக் கிழங்கு- 50 கிராம்
பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 4
பச்சை மிளகாய்- 6
இஞ்சி- சிறு துண்டு
பூண்டு- 6 பல்கள்
சோம்பு, சீரகம்- தலா 1 மேசைக்கரண்டி
பட்டை- 1 துண்டு
கிராம்பு- 2
மஞ்சள் பொடி- சிறிது
கரம் மசாலா- 1 மேசைக்கரண்டி
பால்- 100 மில்லி
மல்லி, புதினா- சிறிது
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

உருளைக்கிழங்கு, ஊற வைத்த பட்டாணி இரண்டையும் வேக வைத்து உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்க வேண்டும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்க வேண்டும். சிறுதுண்டு இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டிக் கொள்ள வேண்டும். மல்லித் தழை, புதினா இலைகளை ஆய்ந்து அலசி வைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சற்று வதக்க வேண்டும். அதில், தட்டிய இஞ்சி, பூண்டைப் போட்டு, சிறிது வதக்கிதும்  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு சற்று வதக்க வேண்டும்.

புதினாவைச் சேர்க்க வேண்டும். அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பட்டாணி ஆகியவற்றைப் போட்டு தேவையான தண்ணீர்விட்டுக் கிளறி மூடிகக் கொதிக்க விட வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து உதிர்ந்த உருளைக்கிழங்கையும் சிறிது உப்பையும் சேர்த்துக் கிளறி விட வேண்டும். பின்னர், பாலை ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். தேவையான உப்பைப் போட்டு கொதித்தும் இறக்கி, கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT