மகளிர்மணி

ரகடா

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

உலர்ந்த பட்டாணிக் கடலை-  200 கிராம்
பெரிய வெங்காயம்- 4
பெரிய தக்காளி- 4
இஞ்சி-  1 துண்டு
பச்சை மிளகாய்- 8
பூண்டு-  5 பல்
மாங்காய் பொடி-  5 மேசைக் கரண்டி
கொத்தமல்லி-  அரை கட்டு
சீரகம், தனியா பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா-  தலா 1 மேசைக் கரண்டி
உப்பு, எண்ணெய்-  தேவையான அளவு

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, மிளகாய், வெங்காயம், பூண்டு, மாங்காய் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்க வேண்டும்.

வாணலியில் தேவையான எண்ணெய்விட்டு சீரகத்தைப் போட்டு வெடித்ததும் கரம் மசாலா பொடி, அரைத்த மசாலா விழுது இரண்டையும் போட்டு, பச்சை வாசனை போக நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் வேக வைத்த பட்டாணியைச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்க்க வேண்டும். கலவை சற்று கெட்டியானதும் நறுக்கிய தக்காளியை போட வேண்டும். லேசான தீயில் சற்று வைத்திருந்து இறக்கி கொத்தமல்லியை தூவி பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT