தேவையானவை:
புழுங்கல் அரிசி-250 கிராம்
கெட்டி அவல்- 100 கிராம்
பார்லி- 1 கரண்டி
இஞ்சி- 1 துண்டு
மிளகாய் வற்றல்- 4
மிளகு- 10
வெங்காயம்- 100 கிராம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை பார்லி, அவலை தனித்தனியாகத் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் உப்பு, நறுக்கிய இஞ்சி, மிளகு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் போட்டு சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அரைத்த மாவில் சேர்த்து கலக்க வேண்டும். அடுப்பில் அடைக்கல்லைப் போட்டு காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை பரவலாக ஊற்றி எண்ணெய்விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு, வேக வைத்து எடுக்க வேண்டும். அடை மொறுமொறுவென கமகமவென மணத்துடன் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.