முகப்பு
மகளிர்மணி

சாம்பல் பூசணி கிச்சடி 

சாம்பல் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:09 AM
பகிர்:


தேவையான பொருள்கள் :

பூசணி  கால் கிலோ
எண்ணெய்  தேவையான அளவு
சீரகம்  அரை தேக்கரண்டி
கடுகு  அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு  1 தேக்கரண்டி
கடலை பருப்பு  1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்  3  9 கீறியது)
சாம்பார் பொடி  1 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல்  கால் கிண்ணம்
கொத்தமல்லி  1 கைப்பிடி
கறிவேப்பிலை  1 கொத்து
உப்பு  தேவையான அளவு

செய்முறை :

சாம்பல் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், கீறிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.  பிறகு நறுக்கிய பூசணியை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும். பின்னர்,  தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சாம்பல் பூசணி கிச்சடி தயார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.