முகப்பு
மகளிர்மணி

பலாக்காய் பிரட்டல்

பலாக்காயைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேகவைத்து வடித்து எடுத்துகொள்ளவும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

தேவையான பொருள்கள்:

பலாக்காய் அரை கிலோ
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
மஞ்சள் தூள் சிறிதளவு
எண்ணெய் உப்பு, தேவையான அளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் கால் கிண்ணம்
மிளகாய்த் தூள் ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி ஒரு துண்டு 
பூண்டு 3
சோம்பு, சீரகம், கசகசா, தலா ஒரு தேக்கரண்டி
முந்திரி அரை மேசைக்கரண்டி

தாளிக்க:

சோம்பு கால் தேக்கரண்டி
பட்டை சிறிய துண்டு
பிரியாணி இலை ஒரு துண்டு

செய்முறை:

பலாக்காயைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேகவைத்து வடித்து எடுத்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்னர் வேக வைத்த பலாக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து அரை கிண்ணம் தண்ணீர் ஊற்றி, நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.