மகளிர்மணி

வெல்ல சீடை

வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். 

கவிதா சரவணன்

தேவையான பொருள்கள் :

பதப்படுத்திய அரிசி மாவு - ஒரு கிண்ணம்
வறுத்து அரைத்து சலித்த உளுத்தம்மாவு - ஒரு தேக்கரண்டி
வெல்லத்தூள் - அரை கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறுப்புஎள் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்தெடுத்து சலிக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும். 

அதனுடன் ஏலக்காய்த் தூள்,  எள், அரிசி மாவு,  உளுத்தம் மாவு, வெண்ணெய் சேர்த்து பிசையவும். ஆறியவுடன் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் காய வைத்து உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT