ஆரோக்கியமாக வாழ...
நோயின்றி வாழ்வதே மனிதர்களுக்கு ஆசை. ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் திறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்.
நோயின்றி வாழ்வதே மனிதர்களுக்கு ஆசை. ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் திறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள்.
தரமான பசி
உழைப்புக்கேற்ற பசி இருக்க வேண்டும். குறைந்தது 2 வேளை பசி இருக்க வேண்டும். உண்ட உணவு சுலபமாகச் செரிக்க வேண்டும். உண்ட பிறகு வயிறு உப்புசம், பாரம், அசதி, தூக்கம் இருக்கக் கூடாது.
தரமான தாகம்
உழைப்புக்கேற்ற தாகம் இருக்க வேண்டும். உதடு காய்வது தாகம் இல்லை. தாகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது.
தரமான உறக்கம்
படுத்த 10 நிமிடத்தில் உறக்கம் வர வேண்டும். இடையில் காலை வரை எழுந்திருக்கக் கூடாது. தூங்கி எழும்பொழுது அசதி இருக்கக் கூடாது. தூங்கி எழுந்ததும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
முழுமையான கழிவு நீக்கம்
காலையில் தினமும் சுலபமாக இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டும். அவை முழுமையாகச் சுலபமாக வெளியேற வேண்டும். சிறுநீரும் சுலபமாக வெளியேற வேண்டும்.
மன அமைதி
மனம் அமைதியாக இருத்தல் வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் மன பயமோ, சஞ்சலமோ அடையக் கூடாது. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் இருக்கக் கூடாது. எப்பொழுதும் சம நிலையிலேயே மனம் இருக்க வேண்டும்.