மகளிர்மணி

அரிசி உளுந்து கஞ்சி

ஏ.எஸ். கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

அரிசி- 1 கிண்ணம்

உளுத்தம் பருப்பு- அரை கிண்ணம்

பூண்டு- 6 பற்கள்

வெந்தயம், 1 தேக்கரண்டி

தண்ணீர்- 5 தேக்கரண்டி

சுக்குப் பொடி- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

துருவிய தேங்காய்- அரை கிண்ணம்

பால்- அரை லிட்டர்

செய்முறை:

முதலில் அரிசி, உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துகொள்ள வேண்டும். பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு தீயைக் குறைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும். அதன்பின்னர், குக்கரை திறந்து மத்து கொண்டு வேசாக கடைந்து, பின்னர் சுக்குப் பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி கொதிக்க வைத்த பாலை ஊற்ற வேண்டும்.இதை நன்கு கிளறி இறக்கினால் போதும்,. சுவையான கஞ்சி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT