முட்டக் கத்தரிக்காய் குழம்பு 
மகளிர்மணி

முட்டக் கத்தரிக்காய் குழம்பு

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முதலில் நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

நல்லெண்ணெய்- 150 மில்லி

வெங்காயம்- அரை கிலோ நறுக்கியது

பிஞ்சுப் பொடி கத்தரிக்காய்- அரை கிலோ (நான்காக நறுக்கியது)

தக்காளி- 5

அரைக்க:

மிளகாய் வற்றல்-10

சீரகம்- 3 தேக்கரண்டி

குழம்பில் போட:

வெந்தயப் பொடி- 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- இரண்டு சிட்டிகை

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முதலில் நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்கு ஜூஸ் ஆகும் வரை வதக்கவும். இவை நன்கு வதங்கியதும் நான்கு பாகங்களாக நறுக்கிய, ஆனால் முழுதாக இருக்கும் பிஞ்சுக் கத்தரிக்காயை போட்டு நன்கு வதக்கவும்.

கத்தரிக்காய்கள் வதக்கும் நேரத்தில் அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு அரைத்து எடுக்கவும். இப்போது கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி கலந்துவிடவும். இப்போது வெந்தயத்தூள், மஞ்சள் தூள் போட்டு நான்கு கொதி வரும் வரை குழம்பை கொதிக்க விடவும்.

குழம்பு சிவப்பு நிறமாக வர , வீட்டில் செய்த காஷ்மீரி மிளகாய்த் தூளைச் சேர்க்கலாம். மிளகாய்த் தூள் சேர்த்தால், மிளகாய் வற்றல் சேர்க்கத் தேவையில்லை. இல்லையென்றால், இரண்டையும் பாதி, பாதியாகச் சேர்க்கலாம். குழண்பில் பிளேவர் வேண்டும் என்றால் கறி மசால் தூவி கலக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT