பசலைக் கீரை சப்பாத்தி
பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.
தேவையான பொருள்கள்:
பசலைக் கீரை- அரை கட்டு
கோதுமை மாவு- அரை கிலோ
Advertisement
Advertisement
பெரிய வெங்காயம்- 1
பச்சை மிளகாய்-5
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு, தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
செய்முறை:
பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள பசலைக் கீரையைப் போட்டு நன்றாக வதக்கி இறக்கவும். ஆறியவுடன் தேவையான அளவு உப்பு, எலுமிச்சைப் பழச் சாறு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகக் கெட்டியாக அரைக்கவும். இந்த அரைத்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்திகளாகச் சுட்டு சாப்பிடலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.