தேவையான பொருள்கள்
ஈர ஆவாரம்பூ- 1 கிண்ணம்
உலர்ந்த பொடி- 2 தேக்கரண்டி
தண்ணீர்- 250 மில்லி
கேரட், தக்காளி- தலா 1
பீன்ஸ்- 5
வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, புதினா- சிறிதளவு
பூண்டு- 2 பல்
மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக் கரைக்கவும். பிறகு காய்கறி, கீரைகளைக் கழுவி நறுக்கி, தண்ணீர் கலந்து வேகவிடவும், நல்ல மணம் வரும்போது, மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத் தூள் சேர்த்து பரிமாறவும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் அருமருந்து இது.
கோ.மஞ்சரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.