தேவையான பொருள்கள்:
நறுக்கிய வாழைக்காய் துண்டுகள்- 2 கிண்ணம்
கசகசா- 3 மேசைக் கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
எண்ணெய், உப்பு, தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு வாழைக் காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துகொள்ளவும். கசகசாவை பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், அரைத்த கககசா கலவை போட்டு நன்கு கிளறவும். மணம் வந்ததும் பொரித்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டுகள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்குவம். கொஞ்சம் தண்ணீர்விட்டு மிதமான தீயில் வைத்து, சில நிமிடங்கள் கிளறி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.