மகளிர்மணி

வாழைக்காய் பொடி தூவல்

DIN

தேவையான பொருள்கள்:


முற்றிய வாழைக்காய்- 2
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
புளி- கொட்டைப் பாக்கு அளவு
தனியா- 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 4
பெருங்காயத் தூள்- சிறிது
கடுகு- கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்- உப்பு- தேவையான அளவு


செய்முறை:

வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்கக் கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத் துண்டுகளைப் போட்டு வேக வைத்து வடித்துகொள்ளவும். தனியா, கடலைப் பருப்பு, உளுந்துப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் வறுத்து, கரகரப்பாக அரைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

மே 20 வரை கனமழை நீடிக்கும்: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

SCROLL FOR NEXT