மகளிர்மணி

புதினா ஆலு ஃபிரை

ஜி.மஞ்சரி

தேவையான பொருள்கள்:

புதினா இலைகள்- 1 கிண்ணம்

உருளைக் கிழங்கு- கால் கிலோ

சீரகம்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 4

மஞ்சள் தூள்- 1 சிட்டிகை

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

புதினாவை வெறும் வாணலியில் வறுத்து ஆறவைத்து கைகளால் நொறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.. பின்னர், நொறுக்கி வைத்துள்ள புதினா இலைகளைச் சேர்த்துக் கிளறி பாத்திரத்தை மூடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஃபிரை செய்து இறக்கவும். இதை சப்பாத்தியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள்! திறந்து வைத்த கனிமொழி எம்.பி.

பலத்த காற்றால் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாழைகள் சேதம்!

இலவசங்களே அனைத்து விலை உயர்வுக்கும் காரணம்: சீமான்

பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் - சில ஆலோசனைகள்!

சேலை(யில்) சித்திரம்... மன்னாரா சோப்ரா!

SCROLL FOR NEXT