மகளிர்மணி

கொள்ளு சாதம்

சுவையான கொள்ளு சாதம் செய்வது எப்படி?

எல்.மோகனசுந்தரி

தேவையான பொருள்கள்:

கொள்ளு- 150 கிராம்

அரிசி- 1 டம்ளர்

பெரிய வெங்காயம்- 2

தக்காளி- 3

வரமிளகாய்- 3

கறிவேப்பிலை- 2 கொத்து

கொத்தமல்லித் தழை- சிறிதளவு

எலுமிச்சை- கால் பழம்

பூண்டு- 10 பல்

பெருங்காயம்- கால் தேக்கண்டி கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடலைப் பருப்பு- அரை தேக்கரண்டி

நெய்- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவிக் கொள்ளவும். கொள்ளை லேசாக வறுத்து, அரை வேக்காடு வேக வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் எண்ணெயை ஊற்றவும். காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வேக வைத்த கொள்ளு சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் 4 டம்ளர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கழுவி வைத்துள்ள அரிசியைச் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவைத்து, வேகவிடவும். அடுப்பில் இருந்து இரக்கிவைத்து, ஆவி அடங்கியதும் எலுமிச்சம் பழச் சாற்றைச் சேர்த்து சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT