மகளிர்மணி

கொள்ளு முழு பயறு சுண்டல்

சுவையான கொள்ளு சுண்டல் செய்வது எப்படி?

மோகனசுந்தரி

தேவையான பொருள்கள்:

கொள்ளு- 50 கிராம்

முழு பயறு- 100 கிராம்

பச்சை மிளகாய்- 3

தேங்காய்- அரை மூடி

கொத்தமல்லி- ஒரு பிடி

இஞ்சி- 1 துண்டு

எலுமிச்சம் பழம்- பாதி அளவு

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கொள்ளு, பயறு இரண்டையும் லேசாக வறுத்து, அரை நாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர், குக்கரில் உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். சூடு ஆறியதும் தண்ணீர் இல்லாமல் வடியவிட்டு எடுத்துகொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிக் கொண்டு பயறும் போட்டு கிளற வேண்டும். பின்னர், தேங்காய்த் துருவலைப் போட்டு நன்றாகக் கிளறி கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழிந்து நறுக்கிய கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT