வேம்பம்பூ வத்தல்
Updated On : 1 ஜூன், 2024 at 10:16 PM
தேவையான பொருள்கள்:
வேப்பம் பூ- 500 கிராம்
புளித்த தயிர்- 100 மில்லி
Advertisement
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வேம்பம்பூவைச் சுத்தம் செய்து தூசி, குச்சிகளை அகற்றி ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். தயிரைவிட்டு உப்புப் போட்டுத் துணியில் விடும் முன்பு நன்றாகக் கலக்கி பிறகு துணியில் உலர்த்தி வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் எடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். இதை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கலந்து சாப்பிடலாம். வேம்பம்பூவை தயிர், உப்பு போடாமல் காய வைத்து பத்திரப்படுத்தினால் ரசத்தில் வறுத்துப் போடலாம். வத்தல் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.