அமெரிக்க நீதிபதியான இந்தியப் பெண்
இந்தியாவில் பிறந்த ஜெயா படிகா அமெரிக்க நீதிபதியாக நியமனம்
இந்திய பெண்மணி ஒருவர் அமெரிக்காவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளி அல்ல; இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடி புகுந்தவர். அவருடைய பெயர் ஜெயா படிகா.
விஜயவாடாவைச் சேர்ந்த ஜெயா படிகா, கலிஃபோர்னியா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக ஜெயா நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்பு உறுதிமொழியை தெலுங்கில் எடுத்துகொண்டார்.
குடும்பம் தொடர்பான சட்ட விதிகளில் அறிவும், அனுபவமும் கொண்ட ஜெயா, கலிஃபோர்னியாவில் வழக்குரைஞராகச் செயல்பட்டு வந்தவர்.
-சக்கரவர்த்தி