மகளிர்மணி

முருங்கைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை: நோய் நிவாரணத்திற்கான இயற்கை மருந்து

DIN

முருங்கைக் கீரை பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது.

முருங்கை இலை துளிரையும் வேப்ப இலை துளிரையும் சேர்த்து அரைத்து சாப்பிட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

முருங்கைக் கீரை சாறுடன் தேன் கலந்து சாப்பிட சுகப் பிரசவம் உண்டு.

முருங்கைக் கீரையுடன் பூண்டு சேர்த்து உண்டு வர பால் சுரப்பு அதிகரிப்பதுடன் பலத்தைக் கொடுக்கும்.

முருங்கை இலைகளை நீக்கிவிட்டு, ஈர்க்கை மட்டும் எடுத்து மிளகு, சீரகம் சேர்த்து இடித்து ரசம் வைத்து சாப்பிட முதுகுவலி, உடல் வலி குணமாகும்.

வாரத்தில் இரு நாள்கள் முருங்கைக் கீரையையும், முருங்கைக்காயையும் சமையலில் சேர்த்துகொள்ள மாலைக்கண் நோய் குணமாகும்.

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை சரி செய்யும்.

பச்சைப்பயிருடன் முருங்கைப் பூ சேர்த்து கூட்டு செய்து சாப்பிட கண் எரிச்சல் குணமாகும்.

கீரையுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட மலமிளக்கியாக இருப்பதோடு, வயிற்றுப்புண் குணமாகும்.

மகாலெஷ்மி சுப்பிரமணியன், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT