தேவையான பொருள்கள்:
பச்சரிசி -200 கிராம்
புழுங்கலரிசி- 100 கிராம்
புளி- ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு
தேங்காய்-1
மிளகாய் வத்தல்- 10
வெல்லம்- இரண்டு அச்சு
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு- தலா 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இரண்டு அரிசியையும் தண்ணீர்விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வத்தல், வெல்லம் ஆகியவற்றை அரிசியோடு சேர்த்து அரைத்து தண்ணீர்விட்டு அலம்பி தோசை மாவு பதத்தில் கரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து கரைத்த மாவைவிட்டு கெட்டியாகக் கிளறி எடுக்க வேண்டும். வாணலியை சுரண்டி எடுத்தால் உதிர் உதிராக வரும். இது சாப்பிட சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.