முகப்பு
மகளிர்மணி

அழகுக் குறிப்புகள்...

வீட்டில் உள்ள காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டு அழகைக் கூட்டலாம்.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 12:22 PM
பீட்ரூட்
பகிர்:

வீட்டில் உள்ள காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டு அழகைக் கூட்டலாம்.

பீட்ரூட்

பீட்ருட், காரட், தக்காளி ஆகியவற்றை தலா ஒன்று, கொஞ்சம் கருவேப்பிலையையும், இஞ்சியையும் போட்டு அரைத்து தினமும் ஒரு கிண்ணம் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் இளநரை போய்விடும்.

பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து சிறிது பார்லி பௌடர், லெமன் ஜூஸ் சிறிது சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

பீட்ரூட்டை தோல் சீவி, துருவி விழுதாக அரைத்து கைகளில் தடவி, 5 நிமிடங்கள் மசாஜ் செய்து நன்கு காய்ந்தவுடன் கைகளைக் கழுவவும். தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.

தர்பூசணி

தர்பூசணியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதனால் சருமம் பொலிவோடு இருக்கும்.

சருமத்தில் சுருக்கங்கள் அதிகம் இருந்தால், தர்பூசணியை அரைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தர்பூசணியை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்காது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு:

சரும அழுக்குகளை நீக்க, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின்னர், அதில் 1 முட்டை, சிறிது தயிர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இளமைத் தோற்றத்தை தக்க வைக்க உருளைக்கிழங்கை அரைத்து, அதில் சிறிது ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

கண்களின் சோர்வை நீக்க, உருளைக்கிழங்கு துண்டுகளை சிறிதுநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின்னர் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும்போது செய்தால், கண்களின் சோர்வானது உடனே நீங்கும்.

உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கி, கண்களின் மேல் 20 நிமிடங்கள் வைத்தால், நொதியானது கருவளையத்தைப் போக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.