ரசகுல்லா புட்டிங் 
மகளிர்மணி

ரசகுல்லா புட்டிங்

நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாதியளவு பாலை ஊற்றி, பால் சிறிது குறையும் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

ரசகுல்லா - 10

ரசகுல்லா சிரப் - 4 மேசைக்கரண்டி

பால் - 1 லிட்டர்

கஸ்டர்ட் பவுடர் - 2 மேசைக்கரண்டி

ரோஜா பன்னீர் - 1 தேக்கரண்டி

நறுக்கிய பிஸ்தா பருப்பு - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாதியளவு பாலை ஊற்றி, பால் சிறிது குறையும் வரை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் கஸ்டர்ட் பவுடரை போட்டு, மீதமுள்ள பாதி அளவு காய்ச்சாத பாலை ஊற்றி, கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.

இந்த கலவையைக் கொதிக்க வைத்த பாலில் ஊற்றி, ரசகுல்லா சிரப் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி, மீண்டும் குறைவான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும். ரசகுல்லாவை மென்மையாகப் பிழிந்து பாதியாக நறுக்கி தனியாக வைக்கவும்.

அடுப்பில் இருக்கும் கலவை கெட்டியானதும், அதில் நறுக்கிய ரசகுல்லா மற்றும் ரோஜா பன்னீரை சேர்க்கவும். மெதுவாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து நறுக்கிய பிஸ்தா போட்டு பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT