நாகஜோதி கிருஷ்ணன்
தேவையான பொருள்கள்:
ஆப்பிள்-2
சர்க்கரை-3 மேசைக்கரண்டி
முந்திரி-10
ஏலக்காய் பொடி- அரை தேக்கரண்டி
நெய்- தேவையான அளவு
செய்முறை :
ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீரைவிட்டு மை போல் அரைக்கவும். ஒரு வாணலியில் வைத்து நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். அதை பாத்திரத்தில் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
நிறம் மாற ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையைச் சேர்த்து கிளறவும். நெய் வெளியில் வரும் வரை வதக்கவும். நன்கு சுண்டி வந்ததும் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிளறி இருக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.