மகளிர்மணி

கொள்ளுத் துவையல்

முதலில் ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.

தினமணி செய்திச் சேவை

தேவையான பொருள்கள்:

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

கொள்ளு - அரை கிண்ணம்

உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு -தலா 2 தேக்கரண்டி

பூண்டு - 4

காய்ந்த மிளகாய் - 6

கறிவேப்பிலை, புளி - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். அதனுடன் ஒரு கப் கொள்ளு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். நன்கு வறுபட்டதும், அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டும். அதன் பின் உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பூண்டு தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும். பிறகு புளி சேர்த்து வதக்கவும். பின்னர் தேங்காய்த் துருவலை வறுத்து எடுக்க வேண்டும். இவை அனைத்தையும் சிறிது நேரம் ஆறவிடவும். அதன்பின் உப்பு சேர்த்து அவற்றை மையாக அரைக்கவும். கொள்ளுத் துவையல் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT