பேரீச்சம் பழ கேக் 
மகளிர்மணி

பேரீச்சம் பழ கேக்

முதலில் மைதா மாவைச் சலித்து, வெண்ணெயைச் சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்க வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

வெண்ணெய்- 200 கிராம்

மைதா மாவு- 400 கிராம்

பேரீச்சம் பழம்- 250 கிராம்

பொடி செய்த சர்க்கரை- 300 கிராம்

சமையல் சோடா- 2 தேக்கரண்டி

அக்ரூட் பருப்பு- 3 மேசைக்கரண்டி

பேக்கிங் பௌடர்- 1 தேக்கரண்டி

பால், நெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் மைதா மாவைச் சலித்து, வெண்ணெயைச் சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்க வேண்டும். துண்டுகள் செய்த அக்ரூட், கொட்டை நீக்கித் துண்டுகளாக்கிய பேரீச்சம் பழம், பொடித்த சர்க்கரையுடன் சேர்த்து மாவுடன் கலக்கிக் கொள்ள வேண்டும்.

சமையல் சோடா, பேக்கிங் பௌடர் ஆகியவற்றைப் பாலில் போட்டு நன்றாகக் கலக்கி, அதையும் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை ஒன்பது அங்குல பேக் செய்யும் வட்டத் தட்டில் போட்டு நெய் தடவி, மாவு தூவிய தட்டில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் வெந்தவுடன் எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT