கோபி பிரியாணி 
மகளிர்மணி

கோபி பிரியாணி

காலிஃபிளவரை துண்டுகளாக்கி சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும்.

எல்.மோகனசுந்தரி

தேவையானவை:

பாசுமதி அரிசி- அரை கிலோ

பெரிய வெங்காயம்- கால் கிலோ (நறுக்கியது)

தக்காளி-4 (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

காலிஃபிளவர்- 1 சிறியது

தயிர்- 50 மில்லி

பால்- 100 மில்லி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

முந்திரிப் பருப்பு-100 கிராம்

பட்டை- 1 துண்டு

கிராம்பு- 3

ஏலக்காய்- 5

பச்சை மிளகாய்- 7 (சிறியது)

எலுமிச்சம் பழம்- 1

மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி

புதினா, கொத்தமல்லித் தழை- அரை தேக்கரண்டி

செய்முறை:

காலிஃபிளவரை துண்டுகளாக்கி சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் வைத்திருந்து எடுக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் வைத்திருந்து வடிக்கவும், முந்திரிப் பருப்புடன் ஏலக்காய், பட்டை, கிராம்பை சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி தயிர்விட்டு நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கிளறவும். பின்னர், காலிஃபிளவர் துண்டுகள், நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து கிளறவும். பின்னர், 4 ஆழாக்கு தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரிசியை சேர்க்கவும். அரை வேக்காடு பதம் வந்ததும் நெய் சேர்த்து கிளறி மூடவும். அதன் மேல் சுடுதண்ணீர் பாத்திரத்தை வைத்து தம் செய்து அடுப்பை, சிமமில் வைத்து 5 நிமிடங்கள் காத்திருந்து அணைக்கவும், பின்னர் இறக்கி பரிமாறவும்.

, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT