தேவையானவை:
பாசுமதி அரிசி- 250 கிராம்
வெங்காயம்- 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
எண்ணெய்- 3 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
அரைக்க:
மிளகாய்த் தூள்- அரை தேக்கரண்டி
தனியாத் தூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பட்டை- தலா 1 துண்டு
கிராம்பு, ஏலக்காய்- தலா 2
பூண்டு- 10 பல்
செய்முறை:
அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள வற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை நன்றாக வதக்கி, இரண்டு கிண்ணம் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், அரிசியைச் சேர்த்து வெந்ததும் இறக்கி, பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.